கன்பூசியஸ் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Flip kart Daily offers update....

Breaking

Wednesday, 9 August 2017

கன்பூசியஸ் சிந்தனை வரிகள் - தமிழ்

confucius   Inspirational words in Tamil
கன்பூசியஸ்    சிந்தனை வரிகள்  - தமிழ்confucius   Inspirational words in Tamil

கன்பூசியஸ்    சிந்தனை வரிகள்  - தமிழ்

1. சிறிய தவறுகளை திருத்தி கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது.
2. தனக்கு தெரிந்ததை தெரிந்தது என்றும். தனக்கு தெரியாததை தெரியாது என்றும் அறிவதுதான் அறிவு.
3. தீயவற்றின் உற்பத்தி சாலை இதயம்.
தீயனவற்றை விற்குமிடமே  நாக்கு.
4. சிறிய விஷயங்களில் பொறுமை கட்டாவிட்டால் பெரிய விஷயங்கள் கெட்டுப்போகின்றன .
5. உங்களுக்கு சரியான ஆலோசனை வழங்கக்கூடிய பெரிய மனிதர் உங்களை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.
6. ஓர் ஏழையின் செல்வம் அவனது  திறமைதான்.
7. ஒவ்வொன்றும் அழகுடையதே. ஆனால் எல்லோர் கண்களும் அதனை காண்பதில்லை.
8. நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் இன்னொரு தவறு செய்தவராகி விடுவீர்கள்.
9. நீ வாயை திறக்கும் போதெல்லாம் உன் உள்ளதை திறக்கிறாய், ஆகவே கவனமாக இரு.
10. கோபம் தலை தூக்கும் பொது அதன் பின்விளைவுகளை சிந்தித்து பாருங்கள்.
11. கண்ணியமான மனிதன் தன்னை தானே குறை கூறி கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்.
12. இருட்டை சபித்து கொண்டு இருப்பதை விட்டுவிட்டு ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.
13. மனதிடம் இல்லாத மனிதனால் வறுமையையும் சரி, செல்வநிலையையும் சரி வெகு நாள் தங்க முடியாது.
14. ஒழுக்கமற்றவனை நண்பனாக கொள்ளாதே.
15. வாழ்ந்த நிலையில் ஒரு நல்ல பெயரை எடுக்காமல் இறந்துவிடுவோமோ என்று அச்சப்படுபவன் மதிக்கப்படவேண்டிய மனிதன்.
16. மக்களிடம் நாகரிகம் வளரவேண்டுமானால் , சமுதாயம் உயர வேண்டுமானால் கல்வி பரவ வேண்டும்.
17. அறிவால் உழைப்பவர் ஆள்கின்றனர். உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர்.
18. நம்முடைய மிகப்பெரிய பெருமை, விழாமல் இருப்பதல்ல.ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில் இருக்கிறது.
19. ஒருவர் உன்னை தாழ்த்தி பெறும்போது ஊமையை இரு. ஒருவர் உன்னை உயர்த்தி பேசும்போது செவிடனாய்   இரு.
20. கடமையை செய்யாமல் எல்லாம் விதிவசம் என்று சொல்வது, சோம்பேறிகள் பேச்சு.
21. நீ சுமக்கின்ற நம்பிக்கை நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்.
22. சரியானது எது என்று நீ உணர்ந்த பிறகும் நீ அதை செய்யாமல் இருப்பாதே மகா கோழைத்தனம்.
23. பத்தாவது முறையாக கிழே விழுந்தவனை பார்த்து பூமி சொன்னது நீ ஒன்பதாவது முறையாக எழுந்தவன் என்று.
24. தோல்வி வரும்போது அதற்க்கு இதயத்தில்   இடம் கொடுக்காதே. வெற்றி வரும்போது அதற்க்கு தலையில் இடம் கொடுக்காதே.
25. ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம், ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெய்த்துவிடலாம்.

mgid

Loading...

Flipkart

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post