Type Here to Get Search Results !

Best Life successful Motivational Words in Tamil # 2

Best Life successful  Motivational Words in Tamil # 2







Best Life successful  Motivational Words in Tamil # 2

1. யானைக்கு கரும்பு தோட்டமே தேவைப்படுகிறது. எறும்புக்கு சக்கையே போதுமானதாக இருக்கிறது. தோட்டம் கிடைக்கும்போது யானையை இரு.. சக்கை கிடைக்கும்போது எறும்பாய் இரு.. வாழ்க்கையில் திருப்தியில்லை என்ற பேச்சுக்கே இடமிருக்காது..!!

2. அன்பு இதயத்தில் இருக்கட்டும், அறிவு செயலில் இருக்கட்டும், ஆணவம் காலுக்கடியில் இருக்கட்டும், நம்பிக்கை மட்டும் நம் மொத்த உருவமாக இருக்கட்டும்..!!

3. தடைகளை தட்டிக்கழிப்பதை விட, தகர்த்து விடுவது தான் புத்திசாலித்தனம்...

4. என்னை யாருக்கும் பிடிக்கவில்லை" என்று கவலைபடுவதற்கு நீ சந்தையில் நிற்கும் பொம்மையல்ல.. நீ என்பது நீயே.. உன்னை உனக்கு பிடித்தால் போதும்..!!

5. வாழ்வில் சிலநேரம் தொடர் கஷ்டங்கள் வரலாம்.. அவற்றை நம்பிக்கையுடன் சந்தியுங்கள்.. மனம் தளராதீர்கள்.. அவைதான் நாளை நாம் பெறப்போகும் வெற்றியின் படிக்கட்டுகள்..!!

6. மனது சந்தோஷமா இருக்கும்போது பாதைகளைப் பற்றி பயம் ஏற்படுவதில்லை.. எப்பவுமே சந்தோஷமா இருங்க.. எதிர்காலத்தை எதிர்கொள்ள கஷ்டம் இருக்காது..!!

7. இதயத்தில் எத்தனை வலிகளும் கவலைகளும் இருந்தாலும், இனிமையாக சந்தோஷமாக பிறரிடம் பேசினால் உலகமே உங்களிடம் பேச ஆசையும் ஆவலும் கொள்ளும்..!!

8. அழகாக இல்லை என்று வருத்தப்படாதே.. உன் தகுதி உயரும்போது நீ அழகாய் தெரிவாய்..

9. வெற்றி என்பது நூறு முறை விழுந்து, நூறு முறை எழுவது..

10. நீ வலிமையாக இருக்கவேண்டும் என்றால், துன்பங்களை தனியாக எதிர்கொள்ள கற்றுக்கொள்..
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content