Type Here to Get Search Results !

Superb Thinking quotes in Tamil # 08

Superb Thinking quotes in Tamil # 08








Superb Thinking quotes in Tamil # 08

1. அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்.  நெப்போலியன்

2. அழகு மற்றும் அப்பாவித்தனம் ஆகியவற்றுக்கு எதிரிகள் கிடையாது.  - வில்லியம் பட்லர் ஈட்ஸ்

3. அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே! உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்? நீயே உன் காவலன்....ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!  - மனதை வருடிய வரிகள்

4. அழும்போது தனியாக இருந்து அழ வேண்டும். சிரிக்கும் போது நண்பர்களோடு இருந்து சிரிக்க வேண்டும்.  - கவிஞர் கண்ணதாசன்

5. ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..   - கவிஞர் கண்ணதாசன்

6. ஆசையை வளரவிடாதே அது "கள்" ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை"கள்")  - மனதை வருடிய வரிகள்

7. ஆடம்பரம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவன், கண்டிப்பாக ஏழையாக இருக்க வேண்டும்.   - ஜார்ஜ் எலியட்

8. ஆண்கள் பொதுவாக தங்களின் தாயின் உருவாக்கத்தைப் பொருத்தே இருக்கின்றார்கள்.   - ரால்ப் வால்டோ எமர்சன்

9. ஆர்வம் இல்லாமல் அடைந்த எதுவும், எப்போதும் சிறந்தது அல்ல.  - ரால்ப் வால்டோ எமர்சன்

10. இடர்ப்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்து காட்டும்.  அரிஸ்டாட்டில்

11. இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.  விவேகானந்தர்

12. இந்தியாவில் நாம் மரணம், நோய், பயங்கரவாதம் மற்றும் குற்றம் பற்றி மட்டுமே படிக்கின்றோம்.  அப்துல்கலாம்

13. இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.  அரிஸ்டாட்டில்

14. இன்று உங்களால் பெற முடிந்த மகிழ்ச்சியை நாளை வரை தள்ளிப் போடாதீர்கள்.  - ஆல்டஸ் ஹக்ஸ்லி

15. இரண்டு உடல்கள் வசிக்கும் ஒரு ஆன்மாவிற்காக உருவானதே அன்பு  - அரிஸ்டாட்டில் 

16. இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.  - கவிஞர் கண்ணதாசன்

17. இரண்டு தோட்டங்களுக்கு இடையே எழுப்பப்பட்டுள்ள சுவர் போன்றது துன்பம்.  - கலீல் ஜிப்ரான்

18. இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது  - நெப்போலியன் 

19. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

20. உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.  - அம்பேத்கர்     

Read More Related Post :-













Thinking Quotes                   

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content