ஷேக்ஸ்பியர் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Monday, 4 September 2017

ஷேக்ஸ்பியர் சிந்தனை வரிகள் - தமிழ்

ஷேக்ஸ்பியர் சிந்தனை வரிகள்  - தமிழ்

Shakespeare inspirational words in tamil

ஷேக்ஸ்பியர் சிந்தனை வரிகள்  - தமிழ்

Shakespeare inspirational words in tamil
ஷேக்ஸ்பியர் சிந்தனை வரிகள்  - தமிழ்

Shakespeare inspirational words in tamil

ஷேக்ஸ்பியர்
1. உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
2. நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள் ஒவ்வொரு கண்ணும் தங்களையே பார்ப்பதாக எண்ணுவார்கள்.
3. எவர் பேசுவதையும் கேட்டுக்கொள். ஆனால் சிலரிடமே பேச்சு கொடு.
எவர் கஷ்டத்தையும் தெரிந்து கொள், ஆனால் உன் கருத்தை கூறிவிடாதே.
4. நேரத்தை தள்ளி போடாதே, தாமதித்தால் அபாயமான முடிவு ஏற்படும்.
5. உங்களை தவிர வேறு எந்த மனிதனையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்க தேவையில்லை.
6. நண்பனிடம் கடன் வாங்குபவர் நட்பை விற்றுவிடுகிறார்.
7. துன்பங்கள் வரும்போது தனியாக  வருவதில்லை, அவை மொத்தமாகவே வருகின்றன.
8. அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதை விட , புத்திசாலியான விரோதியை அடைவதே மேல்.
9. நேரத்தை வீணாக்காதீர்கள், பின்பு உங்கள் நேரத்தை அது வீணாக்கும்.
10. பெண்ணின் இதயத்தை பேச்சால் வெல்லமுடியாதவன் , நாக்குள்ள மனிதனல்ல.
11. கொள்ளைக்காரன் பணக்காரனை கொள்ளைடித்து ஜீவனம் செய்கிறான், முதலாளி ஏழையை கொள்ளையடித்து ஜீவனம் செய்கிறான்.
12. நல்லதொன்றும், கெட்டதொன்றும் எதுவுமில்லை, நாம் நினைப்பதுதான் அதை அவ்வண்ணம் ஆக்குகிறது.
13. எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், சிலரிடம் நம்பிக்கை வையுங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.
14. நீ போகவேண்டிய இடத்திற்கு மூன்று மணிநேரம் கூட முன்கூட்டியே சென்றுவிடலாம், ஆனால் ஒரு நிமிடம் கூட பின்தங்கிவிட கூடாது  .  
15. வெறும் அதிர்ஷ்டத்தை  மட்டும் தேடி செல்லும்போதுதான், நாம் கால்கள் இடறி விழுந்துவிடுகிறோம்.
16. ஒரு தவறான சண்டையில் உண்மையான வீரம் இருக்க முடியாது.
17. நண்பனுக்கு கடன் கொடுத்தால் , நண்பனும் போய்விடுவான் , கடனும் போய்விடும்.
18. காற்றை விட கடும் வேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்.
19. பலவற்றை கேளுங்கள் ஒரு சிலவற்றை மட்டும் பேசுங்கள்.
20. நறுமண மலர்களோ மெதுவாக மலரும், களைகளோ வேகமாக வளரும்.

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post