தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 01
Humorous Quotes in Tamil - Part 01
தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 01
Humorous Quotes in Tamil - Part 01
1.அப்ரைசல் இரண்டே வகைப்படும். # இவனுக்கு ஏதாச்சும் செய்யணும்..! # இவன ஏதாச்சும் செய்யணும்..!!
2.கோழியின் கண்ணீர் வரிகள் - காலையில்
கொக்கரக்கோ என்றேன்..
மதியம் குக்கருக்குள் வெந்தேன்!!!!
3.இதுவும் கடந்து போகும்.. கடந்து போனால் பரவாயில்லை, ஏறி மிதிச்சி நம்மள சட்னி ஆக்கிட்டு தான் போகுது...
4.விருப்பமில்லாத பொண்ணு கழுத்துல தாலிகட்டறது மட்டுமில்ல.. விருப்பமில்லாத பையன் கையில ராக்கி கட்றதும் குற்றம் தான்...
5.திருக்குறளை வாழ்றதுக்காக படிச்சவங்கள விட "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்கதா அதிக பேரு..!
6.பாம்புக்கு காது கிடையாது எனில், 'தவளை எப்படி தன் வாயால் கெடும்' சொல்லுங்க.??
7.வாழத் தெரியாம சாமியார போனவங்கிட்ட எப்படி வாழறதுன்னு கேக்க போவுது ஒரு மூடர் கூட்டம்...
8.தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது.
9.வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு முதலில் தண்ணீர் கொடுப்பதுதான் பண்பாடு. இப்ப வைபை பாஸ்வேர்ட் கொடுப்பதே சிறந்த பண்பாடு..!!
10.வாய்ப்புங்கிறது வடை மாதிரி.. நாமதான் காக்கா போல தேடித் போய் தூக்கணும்.. பீட்சா மாதிரி வீடு தேடி வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா, வேற ஒருத்தன் கொத்திட்டு போயிருவான்..