புத்தர் சிந்தனை வரிகள் #03
Buddha Inspirational Quotes in Tamil - Part 03
புத்தர் சிந்தனை வரிகள் #03
Buddha Inspirational Quotes in Tamil - Part 03
21.ஒருவன் என்ன செயல் செய்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான்.
ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து
நாம் தப்பிக்க முடியாது."
22.ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன்
அவனுக்குத் தலைவனாக இருக்க முடியாது. தன்னைத் தானே அடக்கி கட்டுப்படுத்தத் தெரிந்த
மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும்
23.குழம்பின் சுவையினை அகப்பை அறிய முடியாதது போல, தமது வாழ்நாள்
முழுவதும் அறிஞர்களோடு பழகினாலும், ஒரு மூடன் அறத்தின் இயல்புகளை அறிய மாட்டான்
24.சமுதாய வாழ்க்கையில் நேர்மை முக்கியம், நேர்மையுடன் கடமையாற்றினால்
வெற்றி நிச்சயம்
25.தீயவர்களோடு நேசம் செய்யாதே, அற்பர்களோடு இணங்காதே. நேர்மையுள்ள
நல்லவர்களோடு நட்புக்கொள். மேன்மக்களோடு சேர்ந்து பழகு
26.வாழ்வின் நிலையாமையை சிந்திக்கத் தொடங்கி விட்டால், கர்வம்
காணாமல் போய் விடும்
27.ஒருமுறை செய்த பாவத்தை மீண்டும் செய்யாத விதத்தில் மனதை
நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்
28.குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால்,
செல்வப்புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுகிறவர் எனக்கருதி, அவரோடு நட்புக்கொண்டு
பழகவேண்டும். அப்படிப்பட்டவரை நண்பராகக் கொண்டு அவருடன் பழகுவது நன்மை பயக்குமேயன்றித்
தீமை பயக்காது
29.கோவம் என்பது .ர் செய்யும் தவறுக்கு
, உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை
30.மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும்,
செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல
துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும்