புத்தர் சிந்தனை வரிகள் #04
Buddha Inspirational Quotes in Tamil - Part 04
புத்தர் சிந்தனை வரிகள் #04
Buddha Inspirational Quotes in Tamil - Part 04
31.அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன்
ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது
32.பொறாமையும் பேராசையும் தீயொழுக்கமும் உள்ள ஒருவன் பேச்சாலோ
உடல் அழகாலோ மட்டும் நல்லவனாகிவிடமாட்டான்
33.மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும்
வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம்அவனைத் தொடர்ந்து செல்லும்
34.சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும்
. சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.-கௌதம புத்தர்
35.வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட,
ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும் தீங்கைவிட, ஒரு மோசமான மனது பெரும்
தீங்கைப்புரியும்- கௌதம புத்தர்
36.வெகு விரைவிலேயே அந்தோ! இந்த உடம்பு, உபயோகமற்ற உணர்சிகளற்ற
மரக்கட்டையைப் போல ஒதுக்கித் தள்ளப்படும்-கௌதம புத்தர்
37.பாவஞ் செய்தவன் இம்மையிலும் துக்கமடைகிறான், மறுமையிலும்
துக்கமடைகிறான். அவன் இரண்டிடங்களிலும் துக்கமடைகிறான். தான் செய்த தீயசெயல்களைக்
கண்டு விசனம் அடைந்து அழிந்து போகிறான்.- கௌதம புத்தர்
38.புண்ணியம் செய்தவன் இம்மையிலும் மகிழ்ச்சியடைகிறான், மறுமையிலும்
மகிழ்ச்சியடைகிறான். அவன் இரண்டிடங்களிலும் மகிழ்ச்சியடைகிறான். தான் செய்த நல்ல
செயல்களைக் கண்டு மனம் மகிழ்ந்து மேன்மேலும் இன்பம் அடைகிறான்.- கௌதம புத்தர்
39.ஒருவர் தாம் உபதேசிப்பதுபோலச் செய்கையில் நடக்காமல் இருந்தால்
அவருடைய உபதேசங்கள், மணம் இல்லாத பூவைப்போலப் பயனற்றவை ஆகும்.-கௌதம புத்தர்
40.ஒருவர் தாம் உபதேசிப்பதுபோலச் செயலிலும் செய்வாரானால்,
அவருடைய போதனைகள், மிக அழகான பூவுக்கு நறுமணம் அமைந்திருப்பது போல, மிக்க பயனுடையவை
ஆகும்.- கௌதம புத்தர்