புத்தர் சிந்தனை வரிகள் #05
Buddha Inspirational Quotes in Tamil - Part 05
புத்தர் சிந்தனை வரிகள் #05
Buddha Inspirational Quotes in Tamil - Part 05
41.மூடர்கள் அறிஞருடன் தமது வாழ்நாள் முழுவதும் பழகினாலும்,
அகப்பை குழம்பின் சுவையை அறியாதது போல, அவர்கள் அறநெறியை அறிகிறதில்லை.-கௌதம புத்தர்
42.அறிவுள்ளவர்கள் அறிஞருடன் சிறிது நேரம் பழகினாலும், நாவானது
குழம்பின் சுவையை அறிவதுபோல, அவர்கள் நன்னெறியை அறிந்து கொள்கிறார்கள்.-கௌதம புத்தர்
43.பயனற்ற ஆயிரம் செய்யுள்களைப் படிப்பதைவிட மன அமைதியைத்
தருகிற ஒரே ஒரு செய்யுளைப் படிப்பது மிக மேலானது.-கௌதம புத்தர்
44.எந்தப் பிராணியையும் அடித்துத் துன்புறுத்தாமலும், கொல்லாமலும்
கொல்லச் செய்யாமலும் இருக்கிறவர் யாரோ அவரை நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.-கௌதம
புத்தர்
45.மயிரை வளர்ப்பதனாலோ, .ப்பினாலோ, கோத்திரத்தினாலோ ஒருவர்
பிராமணர் ஆகமாட்டார். யாரிடத்தில் உண்மையும் அறநெறியும் இருக்கிறதோ அவரே தூய்மையானவர்.
அவர்தான் பிராமணர் ஆவார்.-கௌதம புத்தர்
46.உயிரைக் கொல்கிறவரும், பொய் பேசுகிறவரும், திருடுகிறவரும்,
.ன் மனைவியை விரும்புகிறவரும், மயக்கந்தருகிற கள்ளைக் குடிக்கிறவரும் இவ்வுலகத்திலேயே
தமது வேரைத் தாமே தோண்டிக்கொள்கிறார்கள்.- கௌதம புத்தர்
47.பாவங்களைச் செய்யாதிரு. நல்லவற்றைச் செய். மனத்தைச் சுத்தப்படுத்து!,'
என்னும் இவை புத்தருடைய போதனைகளாக இருக்கின்றன.-கௌதம புத்தர்
48.நீயே உனக்குத் தலைவன், உன்னையன்றி வேறு யார்தான் உனக்குத்
தலைவராகக் கூடும்? ஒருவர் தன்னைத்தானே அடக்கி ஒழுகக் கற்றுக் கொள்வாரானால், அவர் பெறுதற்கரிய
தலைவரைப் பெற்றவர் ஆவார்.-கௌதம புத்தர்
49.ஒருவர் முதலில் தம்மை நல்வழியில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
.குதான் மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். இத்தகையவர் நிந்திக்கப்பட மாட்டார்கள்.-கௌதம
புத்தர்
50.கல்வி அறிவு இல்லாத ஆள் எருதைப் போன்று வளர்கிறான். அவனுடைய
சதை வளர்கிறது; அவன் அறிவு வளரவில்லை.- கௌதம புத்தர்