சுவாமி விவேகானந்தர் சிந்தனை
வரிகள் பகுதி - 7
Swami Vivekananda Inspirational Quotes in Tamil - Part 07
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் பகுதி - 7
Swami Vivekananda Inspirational Quotes in Tamil - Part 07
61.உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது - சுவாமி விவேகானந்தர்
62.உலகத்தில் மனிதனால் முடியாதது எதுவுமில்லை – மனிதனால் முடியாதது மனிதனாக இருப்பது மட்டும் தான் – விவேகானந்தர்
63.பெரியவர்கள் பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.-சுவாமி விவேகானந்தர்
64.ஒருவன் நெருப்பினுள் கூட தூங்கி ஓய்வெடுக்க முடியும். ஆனால், வறுமையில் ஒருவனால் கண்மூடித் தூங்குதல் என்பது முடியாது.-சுவாமி விவேகானந்தர்
65.குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.-சுவாமி விவேகானந்தர்
66.எல்லா உயிர்களும் கோயில் என்பது உண்மைதான். ஆனால், மனிதவுயிரே மகத்தானகோயில். அதை வழிபட இயலாதவன் வேறு எதையும் வழிபட முடியாது.-சுவாமி விவேகானந்தர்
67.யாருடைய மனம் ஏழை எளியவர்களுக்காக இரக்கம் கொள்கிறதோ, அவரே மகாத்மா.-சுவாமி விவேகானந்தர்
68.கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள் -சுவாமி விவேகானந்தர்
69.ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை -சுவாமி விவேகானந்தர்
70.மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும் -சுவாமி விவேகானந்தர்