சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் பகுதி - 8
Swami Vivekananda Inspirational Quotes in Tamil - Part 08
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் பகுதி - 8
Swami Vivekananda Inspirational Quotes in Tamil - Part 08
71.சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான் -சுவாமி விவேகானந்தர்
72.நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான் -சுவாமி விவேகானந்தர்
73.சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும் - சுவாமி விவேகானந்தர்
74.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது -சுவாமி விவேகானந்தர்
75.எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம் - சுவாமி விவேகானந்தர்
76.அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான் - சுவாமி விவேகானந்தர்
77.முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள் - சுவாமி விவேகானந்தர்
78.ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது - சுவாமி விவேகானந்தர்
79.எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம் - சுவாமி விவேகானந்தர்
80.எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள் - சுவாமி விவேகானந்தர்