சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் பகுதி - 9
Swami Vivekananda Inspirational Quotes in Tamil - Part 09
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் பகுதி - 9
Swami Vivekananda Inspirational Quotes in Tamil - Part 09
81.அனைத்திருக்கும் நாமே பொறுப்பு. நான் ஏழையாக சாதாரணமானவனாக பிறந்தேன், வாழ்க்கை முழுவதும் போராட்டங்களையே சந்தித்துள்ளேன் என்று நீங்கள் சொலல்லாம். ஆனால் அதற்கு காரணம் நீங்களே. குற்றத்தை யார்மீதும் சுமத்தாதீர்கள். அதனால் உங்கள் துன்பம்தான் அதிகமாகும்.-சுவாமி விவேகானந்தர்
82.கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனத்தைக் கட்டுபடுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும் - சுவாமி விவேகானந்தர்
83.எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது - சுவாமி விவேகானந்தர்
84.நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் - சுவாமி விவேகானந்தர்
85.செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது - சுவாமி விவேகானந்தர்
86.நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில் - சுவாமி விவேகானந்தர்
87.மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல - சுவாமி விவேகானந்தர்
88.பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது - சுவாமி விவேகானந்தர்
89.வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும். - சுவாமி விவேகானந்தர்
90.நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும் - சுவாமி விவேகானந்தர்