சிசரோ சிந்தனை வரிகள் - தமிழ்
Cicero Inspirational Quotes in Tamil
சிசரோ சிந்தனை வரிகள் - தமிழ்
Cicero Inspirational Quotes in Tamil
சிசரோ சிந்தனை வரிகள்
Cicero Inspirational Quotes in Tamil
1.இலக்கியத்தைக் கற்றால் இளமை வளமாக்கப்படுகிறது. முதுமை குதூகலம் அடைகிறது, செழிப்பு பரிணமிக்கிறது. துன்பம் துரத்தப்படுகிறது, தாய்நாட்டில் மகிழ்ச்சியாகவும், வெளிநாட்டில் அடக்கமாகவும் இருக்கச் செய்கிறது.
2.ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது.
3.காதலின் முடிவுக்கு எல்லா உணர்ச்சிகளும் தலை வணங்குகின்றன.
4.பேராசை இல்லாமலிருப்பது சொத்துக் கிடைப்பதற்குச் சமம்; தேவையற்ற பொருட்களை வாங்காமலிருப்பது வருமானத்திற்குச் சமம்.
5.மன அமைதியில் அடங்கியதே இன்ப வாழ்வு.
6.கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம்.அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா.
7.மனிதராகப் பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்களோ அதை தொடர்ந்து செய்கிறார்கள்.
8.புத்தகம் இல்லாத வீடு - ஆன்மா இல்லாத கூடு
9.எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது.
10.தன் குற்றம் மறப்பதும் பிறர் குற்றம் காண்பதுமே முட்டாள்தனத்தின் விசேஷ குணம்.
11.ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை
12.எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்
13.மனிதர்களுக்கு நன்மை செய்வதில் மனிதர்கள் அநேகமாகத் தெய்வங்களுக்கு இணையாக ஆகின்றனர். வேறு எதிலும் இப்படி ஆக முடியாது.