பெருஞ்சித்திரனார் சிந்தனை வரிகள் - தமிழ்
Peruncittiranar inspirational quotes in Tamil
பெருஞ்சித்திரனார் சிந்தனை வரிகள் - தமிழ்
Peruncittiranar inspirational quotes in Tamil
பெருஞ்சித்திரனார் சிந்தனை வரிகள்
Peruncittiranar inspirational quotes in Tamil
1.பொதுத் தொண்டு என்பது இயல்பாக நாம் காற்றை உள்ளுக்கிழுத்து விட்டுக் கொண்டிருக்கின்றோமே, அதைப் போன்றதன்று; மூச்சைப்பிடித்துக் கொண்டு, நம் வழியில் கிடக்கும் பாறையை முதுகைப் கொடுத்து முட்டித்தள்ளுவதைப் போன்றது.
2.மன உறுதி உள்ளவன், ஒருப்போதும் தான் மேற்கொண்ட செயலை, அது தொல்லை கொண்டது, இழப்புத் தருவது, கடினமுடையது, பல இடர்பாடுகளை அடுக்கடுக்காகத் தருவது என்பன போன்ற காரணங்களுக்காகக் கைவிடமாட்டான்.
3.கஞ்சத்தனம் என்பது சிக்கனத்தின் போலியான ஒரு உணர்வு. பொருட்பொறுப்பினால் இயக்குவது சிக்கனம். பொருளாசையால் இயங்குவது கஞ்சத்தனம்.
4.நாம் செய்ய வேண்டிய செயல் இதுதான், இது தான் நமக்கு பொருத்தமுடையது என்று தெளிவாக நாம் தெரிந்து கொண்டபின் அந்த செயலை நாம் முழுவதுமாக விரும்புதல் வேண்டும்.
5.ஒரு தொழிலை நாம் தெரிந்து கொள்ளாமல் அத்தொழிலில் ஈடுபடுதலோ, அல்லது அத்தொழில் தெரிந்தாரைக் கொண்டு செய்தலோ நன்மை பயவாது.