அம்பேத்கர் சிந்தனை வரிகள் - தமிழ்
Ambedkar inspirational quotes in Tamil
அம்பேத்கர் சிந்தனை வரிகள் - தமிழ்
Ambedkar inspirational quotes in Tamil
அம்பேத்கர் சிந்தனை வரிகள் - தமிழ்
Ambedkar inspirational quotes in Tamil
1.நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது உன்னை கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது என் கடமை.
2.ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.
3.ஒரு இலட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
4.ஒரு தேசத்தின் ஒற்றுமை என்பது அதன் ஆன்மீக ஒற்றுமையே. இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இனத்தவரே.
5.உலகில் யாரும் தெய்வீகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது!
6.வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்.!
7.சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.
8.மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்!
9.எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
10.உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.
11.பணம், பட்டம், பதவிகளுக்காக நாம் போராடவில்லை, நமது வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காவும் , மனிதர்களாக வாழ்வதற்காவுமே போராடுகிறோம்.
12.இலட்சியங்களுக்கு விசுவாசமாக நடப்பதற்கு பதிலாக, கட்டளைக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகிவிடுகிறது.
13.குருட்டு பக்தி தன்னறிவை இழக்கச் செய்யும், பகுத்தறிவை பயன்படுத்தாமல் யாருடைய வாக்குறுதியையும் நம்பக்கூடாது.