தந்தை பெரியார் சிந்தனை வரிகள் - தமிழ்
Thanthai Periyar Inspirational Quotes in Tamil
தந்தை பெரியார் சிந்தனை வரிகள் - தமிழ்
Thanthai Periyar Inspirational Quotes in Tamil
பெரியார் சிந்தனை வரிகள் – தமிழ்
Thanthai Periyar Inspirational Quotes in Tamil
1.பக்தி என்பது தனிச்சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
2.பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
3.தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்.
4.வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
5.ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
6.கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
7.ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
8.மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
9.விதியை நம்பி மதியை இழக்காதே.
10.மற்றவர்களிடம் பழகும் வித்தைகளையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
11.பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.