நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிந்தனை வரிகள் - தமிழ்
Nethaji subash chandra bose inspirational quotes in Tamil
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிந்தனை வரிகள் - தமிழ்
Nethaji subash chandra bose inspirational quotes in Tamil
நேதாஜி சிந்தனை வரிகள் – தமிழ்
Nethaji subash chandra bose inspirational quotes in Tamil
1.தோழர்களே! உங்களது ரத்தத்தைத் தாருங்கள், நான் உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்!
2.சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதல்ல; எடுக்கப்படுவது!
3.முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்!
4.பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது!
5.அதிகாரத்துடன் இணங்கிப்போவதும் அடிமையாக இருப்பதும் மனித மனத்தின் சாபக்கேடு. எத்தனை தியாகங்கள் செய்வதாக இருந்தாலும், அதர்மத்தை எதிர்த்துப் போர் புரிவது ஒன்றுதான் ஒவ்வொரு மனிதனுடைய தலையாய கடமையாக இருக்க வேண்டும்!
6.பதினெட்டே வயதில், கையில் வாளேந்தி போர்க்களத்தில் புலியெனப் பாய்ந்த வீரப் பெண்மணி ஜான்சி ராணி அவதரித்த பூமி இது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்!
7.இரவு எனும் காராக்கிரகம் நம்மைச் சூழ்ந்திடும்போதெல்லாம், காலைப் பகலவனின் அற்புத வெளிச்சம் நம்மை நெருங்கிவிட்டது என்பதே அர்த்தம்!
8.புரட்சி இயக்கங்கள் இடையில் பிரியலாம்; அழிக்கவும் படலாம். ஆனால், அதன் பாடங்கள் என்றும் அழிவதில்லை!
9.வீரர்களே, நீங்கள் அனைவரும் என்றாவது ஒரு நாள் வீடு திரும்புவீர்கள். அப்போது, நாம் பட்ட வேதனைகளையும் வலிகளையும் உங்கள் குழந்தைகளுக்குக் கதைகளாக எடுத்துச் சொல்லுங்கள். எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் நம் தேசத்தில் இருள் சூழ்கிறபோது, இந்தக் கதைகள் அவர்களுக்கு நம்பிக்கையையும் வீரத்தையும் கற்றுத் தரும்!
10.ஒரு மனிதன் வாழ்ந்தான், லட்சியத்துக்காக உயிரைவிட்டான் என்பதைவிட வேறென்ன பெருமை வேண்டும்!
11.கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!