ஏ பி ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #05
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 05)
ஏ பி ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #05
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 05)
ஏ. பி. ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #05
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 05)
41.ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்!
42.புதிய விஷயங்களை படைக்க வேண்டும் என இலட்சியம் உள்ளவர்களுக்கு அவர்களது வேட்கையே ஊக்கமாக அமையும். மற்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை.
43.தவறான காரியங்களை ஒரு போதும் செய்யக்கூடாது. ஒரு இலக்கை நோக்கி செல்ல பலவழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி என்பதுடன் அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்.
44.என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
45.அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட உயர்ந்த இலட்சியங்களுக்காகப் பாடுபடுவது சாலச் சிறந்தது!
46.ஒரு மனிதனை ஜெயிப்பதைவிட அவன் இதயத்தைக் கொள்ளை கொள்வது சிறந்தது!
47.வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.
48.வானத்தைப் பாருங்கள். நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.
49.ஒரு தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள்தான். கருணையில்லாத அறிவியல் முழுமை பெறாது.
50.ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.