விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #08
Vivekananda inspirational quotes in Tamil(PART 08)
விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #08
Vivekananda inspirational quotes in Tamil(PART 08)
விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #08
Vivekananda inspirational quotes in Tamil(PART 08)
71.அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
72.எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப்படவில்லையோ, அந்த வீடும் பாழ் அந்த நாடும் பாழ்.
73.இயற்கை என்றும், விதி என்றும் எதுவும் கிடையாது. கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுவே நடக்கும்.
74.கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.
75.ஏதாவது தவறு செய்துவிட்டால், ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே! என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.
76.உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமாய் இரு, சாந்தம் கொள், வேறுபாடு காட்டாதே.
77.உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள். தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன்.
78.சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும்.
79.சுயநலம் இன்றி வாழ்வதே நல்லொழுக்கம். எந்த நிலையிலும் சுயநலத்தை மறந்து செயல்படுங்கள்.
80.இவ்வுலகில் முன்னேற முயற்சி செய்யுங்கள். உயிர் வாழ்வதின் அறிகுறியாக இருப்பது முயற்சி மட்டுமே.