விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #10
Vivekananda inspirational quotes in Tamil(PART 10)
விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #10
Vivekananda inspirational quotes in Tamil(PART 10)
விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #10
Vivekananda inspirational quotes in Tamil(PART 10)
91.நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனது இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.
92.பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் தத்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.
93.நம் நாட்டுப் பொன்னை பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன காலமேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் இருக்கிறது.
94.ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான்.
95.எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும்.
96.விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.
97.பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.
98.ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்.
99.மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.
100.மனிதன் இயற்கையை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான்.