நான் எடுக்கும் | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil - 13
1. நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்
- A. P. J. Abdul Kalam
2. நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே.. செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்க வேண்டும்...
- Velupillai Prabhakaran
3. கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
- Fidel Castro
4. ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்..!
- B. R. Ambedkar
5. மிகவும் கடினமான வேலையில் ஈடுபட்டுக்கொண்டு, அதை திறமையாகவும் செய்யும் மனிதனுக்கு, எல்லா பரிசுகளும் தானாகவே வந்து சேரும்.
- George Bernard Shaw
6. நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது. ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்
- Alexander the Great
7. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது, எனவே நல்லதையே சிந்தியுங்கள்..!
- Buddha
8. முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள். அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை.
- Napoleon Bonaparte
9. தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு, இல்லையென்றால்.. இந்த உலகம் உன்னை புதைத்து விடும்..!
- Swami Vivekananda
10. பிறருக்கு தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான், அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாகி விடுகின்றோம்..!
- C. N. Annadurai