கிளி வளர்த்தேன் | இயற்கை | Nature quotes in Tamil
1.இதயம் மற்றும் புரிதலின் மூலம் இயற்கையினைப் பார்க்க வேண்டுமே தவிர நம்முடைய கண்களால் அல்ல.
-வில்லியம் ஹாஸ்லிட்
2.கிளி வளர்த்தேன் பறந்து விட்டது. அணில் வளர்த்தேன் ஓடி விட்டது. மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்து விட்டது.
-அப்துல் கலாம்
3.இயற்கை ஒரு போதும் மாறுவதில்லை. அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும், வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்.
-மசானபு புகோகா
4.மழை என்பது இயற்கையின் கொடை. அது விரும்பி அழைத்தாலும் வாராது. புலம்பிப் போவென்றாலும் போகாது.
-பாரதிதாசன்
5.இயற்கை உணவை அதிக விலைக்கு ஒரு வியாபாரி விற்றால், அவன் கொள்ளை லாபம் அடிக்கிறான் என்று பொருள். மேலும் இயற்கை உணவு, அதிக விலையுடையதாக இருந்தால், அவை ஆடம்பர பொருட்களாகி, வசதி படைத்தவர்களால் மட்டுமே வாங்கக் கூடியதாக மாறிவிடும்.
-மசானபு புகோகா
6.இயற்கை வேளாண்மை மென்மையானது; எளிமையானது; அது வேளாண்மையின் ஆதாரத்தை நோக்கி மீண்டும் செல்வதைக் குறிப்பது. ஆதாரத்தை விட்டு ஒரு அடி விலகி நடந்தாலும் அது மயானத்திற்கான நேர்வழிதான்!
-மசானபு புகோகா