நீ வீணாக்கும் | காலம் | Time quotes in Tamil - 03
21.கடந்த காலத்தின் மீது மரியாதை இல்லாமலும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லாமலும், நமக்குள் சண்டையிட்டுக் கொள்வோமேயானால் தோல்வி, அதிருப்தி தவிர வேறென்ன நமக்குக் கிடைக்கும்.
-அப்துல் கலாம்
22.சமயம் வரட்டும் பல நற்செயல்களை ஒரேயடியாகச் செய்துவிடலாம் என்று காத்திருப்பவன் எந்த சமயத்திலும் எதுவும் செய்யமாட்டான்.
-சாமுவேல் ஜான்சன்
23.ஆறாத துயரத்தையும் ஆற்ற வல்லது காலம்.
-கதே
24.நாளைய பொழுதிற்கான சிறந்த தயாரிப்பானது உங்களது சிறந்த செயலை இன்று செய்வதே.
-ஜாக்சன் பிரவுன் ஜூனியர்
25.நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும்.
-இங்கர்சால்
26.நேரத்தை தாமதப்படுத்தாதே, தாமதங்கள் தீமையான முடிவைத் தந்துவிடும்.
-ஷேக்ஸ்பியர்
27.நாளை மறுநாள் என்ன செய்ய வேண்டும் என்பதை, நாளை வரை தள்ளி வைக்காதீர்கள்.
-மார்க் டுவெய்ன்
28.எதற்காகவும் காத்திருக்க வேண்டாம், இந்த நிமிடமே சரியான நேரம்.
-நெப்போலியன் ஹில்
29.நீ வாழ்க்கையை காதலிக்கிறாயா? அப்படியானால் நீ நேரத்தை வீணாக்காதே. ஏனென்றால் வாழ்கையின் மூலப்பொருளே நேரம்தான்.
-பெஞ்சமின் பிராங்க்ளின்
30.நாற்பது வயது என்பது இளைஞர்களின் முதுமை; ஐம்பது வயது என்பது முதியவர்களின் இளமை.
-விக்டர் ஹியூகோ