ஆதிசங்கரர் | Adhisankarar Motivational Quotes in Tamil
1.மனதுடன்
நடத்தும் போராட்டம்
என்றைக்கும் ஓய்வதில்லை.
விழிப்பு நிலையில்
மட்டும் அல்ல.
உறக்க நிலையிலும்
கூட மனதின்
போராட்டம் நம்மைவிட்டு,
ஒருபோதும் நீங்குவதே
இல்லை!
2.நம்மை ஆட்டிப்
படைப்பது நம்
மனம்தான். உருவமற்ற
இந்த மனம்
பெரிய உருவம்
படைத்த நம்மை
எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது
என்பதைக் கவனியுங்கள்.
3.எல்லா சாஸ்திரங்களும் வேத, ஞான நூல்களும் மனதை அடக்குகின்ற வழிமுறைகளையே எடுத்துரைக்கின்றன. மனதை அடக்கியாளும் உறுதியை, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துதான் கேட்டுப் பெறவேண்டும்.
4.காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயில் இருந்து வழிந்த ரத்தத்தை, எலும்பில் இருந்து வருவதாக நினைத்து மேலும் அழுத்தமாகக் கடித்துத் துன்பத்தை அடையும். அந்த நாய் மட்டுமா? மனிதர்களும் ஆசைகளை அதிகப்படுத்திக்கொண்டே, துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
5.உடலுக்குக் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்கிறோம். இப்படி எவ்வளவு அனுபவித்தாலும் மனிதர்களுக்கு, அதில் திருப்தி கிடைக்கப்போவதே இல்லை. ஆனாலும் இந்த மனம், உடலின்பத்துக்கு ஏங்குகிறது. ஆசைப்படுகிறது. கட்டுப்படுத்திக் கொள்வதே இல்லை. நாமும் இந்த மனதின் பின்னேயும் உடல் இச்சையின் பின்னேயும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
6.வாழ்வில்,
நமக்கான இன்பங்கள்
என்று மனம்
வரையறுத்து வைத்திருக்கிற
விஷயங்கள் எல்லாமே
இன்பங்கள் அல்ல.
அப்படியாக நினைத்து
ஏமாறிக்கொண்டிருக்கிறோம். பாலைவனத்தில்,
தூரத்தில் தெரிகிற
கானல்நீர் போலத்தான்,
இந்த இன்பங்களும்!