விடுபட நினைத்தும் | Love and Life Quotes in Tamil-02
331.அகலாமல் நீயிருந்தால்
விலகாமல் நானிருப்பேன்
என் விழி
மூடும் காலம்
வரை
332.உறங்காத கண்களையும்
தழுவி கொண்டது
உறக்கம்
உன்னன்பின் தாலாட்டில்
333.உன்னிதழ்
சுவைத்த தேனீர்
என்னிதழை
நனைக்க கரைந்தது
ஊடலும்
334.விடுபட நினைத்தும்
விடைபெற முடியாமல்
தொடர் கதையாய்
தொடருது
உன் நினைவு
முடிவுரை புரியாமல்
335.வலிகளை
நீ கொடுத்தாலும்
விழிகளில்
உனை சுமப்பேன்
சுகமாய்
336.வாட்டம்
என்பதும்
ஏது நீ
மனதோடு மலராய்
இணைந்திருக்கும்
போது
337.சத்தமின்றி கூந்தல்
கலைத்து செல்லும்
காற்றாய் மனதை
கலைத்து செல்கிறாய்
நினைவில் தீண்டி
338.உன் எதிர்பார்பில்
யாருமிருக்கலாம்
என் எதிர்பார்பில்
நீ மட்டுமே
339.மறைந்து போன
பாத சுவடை
புதுப்பிக்கின்றேன்
நீ தொடர்வாயென
340.பல நேரங்களில்
ஒளியாய்
சில நேரங்களில்
தூசியாய்
என் விழிகளில்
மாற்றத்தை
ஏற்படுத்துகிறாய்
341.உன் பார்வை
வெப்பத்தில்
நானுமொரு
மெல்ல உருகும்
மெழுகுதான்
342.தனிமையின்
கொடுமையும்
இனிமையானது
நீ தென்றலாய்
மனதை தீண்ட
343.பிரிவுகூட சுகமே
நீயும் எனைக்காண
தவித்திருக்கும் போது
344.நினைத்தாலே இனிக்கும்
உன் நினைவில்
அவ்வப்போது
சிக்கி கொள்கிறது
என் நாணமும்
345.கப்பலில்லா
துறைமுகத்தில்
பயண கைதியானேன்
வந்தாய் நீயும்
கரைசேர்க்க
வாழ்க்கை படகாய்
346.கொல்லும் இருளில்
மெல்ல துளிர்விடுகிறது
உன் நினைவு
விடியலை நோக்கி
347.ஒரு விழிக்கு
தடை போட்டாலும்
மறு விழியில்
ரசிப்பேன்
இருவரி கவிதையாய்
உன் விழிகளை
348.ஓசையில்லா
பாஷையில்லா
நீண்ட மௌனமும்
பிடித்துதானிருக்கு
உன் சுவாச
தீண்டலில்
349.தொடர்பில்
உன் குரல்
ஓய்ந்ததும்
செயலற்ற
செல்போனாய் மனம்
மீண்டும்
உன் அழைப்பு
வரும் வரை
350.எனை ஆளும்
அன்பு நீயென்றால்
ஆயுள் முழுதும்
அடிமையே
நான் உனக்கு
351.யாருமற்று
வெறிச்சோடி கிடக்கும்
மொட்டை மாடியாய்
மனம் நீயில்லா
பொழுதுகளில்
352.வண்ணமாய்
மனதில் நுழைந்து
வான வில்லாயாய்
மறைந்து செல்கிறாய்
பார்வையிலிருந்து
353.தந்தையின் பாசத்தில்
தவழ்ந்த மனம்
உன்னிடமும்
அதையே
எதிர் பார்க்கின்றது
சிறு குழந்தையை
போல்
354.அன்போ ஆறுதலோ
வார்த்தையால் வசீகரிப்பதைவிட
ஆதரவாய் வருடும்
உன் உள்ளங்கையின்
அழுத்தமே போதும்
என் ஆயுளுக்கும்
355.தேடியலைந்து
தோற்றுவிட்டேன்
உன்னைத்தாண்டியும்
ஓர் உலகம்
356.மனம் மறைத்தாலும்
கண் காட்டி
கொடுத்து விடுகிறது
உன் மீதுள்ள
காதலை
357.நினைவை தூதனுப்பி
உன் உலகுக்குள்
அழைத்து
வந்து விடுகிறாய்
358.தேன் பருக
மலரை சுற்றி
வரும்
வண்ணத்துப் பூச்சி
போல
உன் காதல்
தேடி
உன்னையே வட்டமிடும்
காதல் பூச்சி
நான்
359.காரணம் கேட்காமலேயே
கண்ணீரின் வலியை
உணர்ந்து கொள்ளும்
துணை கிடைப்பது
வரம்
360.கண்ணனுக்காக
காத்திருக்கும்
ராதையாய்
உனக்காக நான்
உனைக்காண
கவிதைகள் அனைத்தும் அருமை... உங்களின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் நண்பரே !!!
பதிலளிநீக்குThis post is really aweosme. I have bookmarked this post to visit on your site again. Thanks for sharing.
பதிலளிநீக்குThis post is really aweosme. I have bookmarked this post to visit on your site again. Thanks for sharing.
life quotes in telugu
telugu bible quotes
friendship quotes in telugu
love failure quotes in telugu