தோற்று மட்டும் போகவில்லை | Love and Life Quotes in Tamil-03
361.காதுக்குள் ரீங்காரமிடும்
உன் குரலொலி
கேட்டு கம்மலும்
தலை கவிழ்ததோ
நாணத்தில்
362.மனதின்
வெறுமையையும்
நிறைத்து விடுகிறாய்
நினைவில்
363.கண்களோடு நீ
கலந்ததிலிருந்து
காத்திருப்பும்
கடினம் தான்
364.மல்லிகைக்குள் மறைந்திருந்து
மயக்கும் வாசனையாய்
மனதில் ஒளிந்திருந்து
மயக்குகிறாய் எனை
365.எழுதிடுவோம்
ஒரு புதுக்கவிதை
விழிகளில் கலந்து
இதயத்தில் நுழைந்து
366.தோற்று மட்டும்
போகவில்லை
தொலைந்தும் போய்விட்டேன்
உன்னொற்றை பார்வையில்
367.ஒரு முறையேனும்
என் திசை
நோக்கு
என் பயணம்
இனிதே நிறைவடையும்
368.உன் புன்னகை
கண்டு
கண் விழிக்கையில்
அன்றைய தினம்
சுகமாய் பிறக்கிறது
369.உனக்காக நானிருக்கின்றேன்
என்ற உன்
வார்த்தையே
நீயில்ல நேரங்களிலும்
வாழ்க்கையை
ரசிக்க வைத்துக்கொண்டிருக்கு
370.இருண்ட வானையும்
அன்னாந்து ரசிக்க
வைக்க
அவளால் மட்டுமே
சாத்தியம்
(நிலவு
மகள்)
371.விரும்பி கொடுப்பதில்
வாழ்கிறது உன்
மீதுள்ள
என் ஆழமான
காதல்
372.கண்ணாடியில்
எனை ரசிப்பதைவிட
உன் விழிகளுக்குள்
ரசிக்கவே விரும்புது
மனம்
373.எனைத்தேடி
என்னிடமே தருவாய்
என்ற நம்பிக்கையில்
தெரிந்தே தொலைகிறேன்
உன்னில்
374.உனைக்காண
அடம்பிடிக்கும் மனதை
சமாளித்து கொண்டிருக்கின்றேன்
இதோ வந்திடுவாயென
375.சிறு சலசலப்பும்
எனை ஏமாற்றுகிறது
உன் வருகையோயென
நினைக்க வைத்து
376.இவ்வுலகில் எனக்காக
ஒரு அழகிய
கனவை தந்தது
உன் அன்பு
377.மழைத்துளி எண்ணிக்கையிலும்
அலை கரை
மோதும்
எண்ணிக்கையிலும்
என் இதயத்துடிப்பின்
எண்ணிக்கையிலும்.
உன்னிடம் காதல்
சொன்னேன்
378.நீரலையாய் தளும்பும்
உன் நினைவலைக்கு
சுதி சேர்கிறது
கொலுசொலியும்
மொட்டில்லா
மெட்டியிலும் மெல்லிசை
உன் கரம்
பட்டதால்
379.புரியாத போதும்
ரசிக்க தூண்டும்
கவிதையாய் தூண்டுகிறாய்
மனதை
பார்வையில் பேசி
380.காலமும்
கண்ணாமூச்சி
விளையாடுகிறது
தூரத்தில்
உன்னை வைத்து
என் மனதோடு
381.மரணமும் வரமே
உன் தோளில்
சாய்ந்திருக்க
எனை தழுவிக்கொண்டால்
382.விரல்கள் வீணையில்
விளையாடினாலும்
என்னிதய வீணை
மீட்டுவது
உனை தான்
383.சுமக்கின்றேன் என்று
அதிக வலிகளை
கொடுக்காதே
உடைந்திடும் என்னிதயம்
384.குளிர் வாடையாய்
உன் பார்வை
வீச
போர்த்தி கொள்கிறது
வார்த்தைகளும் மௌனமாய்
385.விடுமுறை நாளென்ற
மகிழ்வைவிட நீ
அருகிலிருக்கின்றாய்
என்ற சந்தோஷம்
தான் அதிகம்
மனதில்
386.எண்ண ஏட்டின்
ஆசைகளை
கன்ன ஏட்டில்
பதித்தேன்
இதழ் கவிதைகளாக
387.ஆணிவேராய்
நீயிருப்பதால்
அழகான மலராய்
வாசம் வீசுகிறேன்
இம்மண்ணில்
388.யாரின் இடத்தை
யார் நிரப்பினாலும்
எனக்கான
உன்னிடத்தை
யாராலும்
நிரப்பிட முடியாது
அன்பில்
389.நான்
சரியா தவறா
தெரியாதென்றாலும்
எனக்காக எப்போதும்
நீயிருப்பாய்
என்று மட்டும்
தெரியும்
390.சிந்தனையிலும்
நீயே
சிறகடிக்கின்றாய்
வண்ண கனவுகளோடு
வண்ணத்து பூச்சாகுது
மனமும்