Type Here to Get Search Results !

கண்ணதாசன் சிந்தனை வரிகள் - தமிழ்

kannadasan  Inspirational words in tamil
கண்ணதாசன்    சிந்தனை வரிகள்  - தமிழ்








kannadasan  Inspirational words in tamil
கண்ணதாசன்    சிந்தனை வரிகள்  - தமிழ்

kannadasan  Inspirational words in tamil

kannadasan  Inspirational words in tamil
கண்ணதாசன்    சிந்தனை வரிகள்  - தமிழ்


1. எதையாவது ரொம்ப ஆசை படும்போது அதை இப்போது வைத்திருக்கிறவர் சந்தோஷமாகத்தான் இருக்கிறாரே என்று நிச்சயப்படுத்தி கொள்ளுங்கள்.

2. கேட்கும் போது சிரிப்பு வரவேண்டும். சிந்தித்து பார்த்தால் அழுகை வரவேண்டும் அதுதான் நல்ல நகைச்சுவை.

3. அன்பிலே நண்பனை வெற்றிகொள்.
களத்திலே எதிரியை வெற்றிகொள்.
பண்பிலே சபையை வெற்றிகொள்.

4. பாத்திரத்தின் நிறமல்ல பாலின் நிறம்
ஆத்திரத்தின் நிறமல்ல அறிவின் நிறம்.

5. இந்த உலகத்தில் வேரில்லாமலும் நீரில்லாமல் வளரக்கூடிய ஒரே செடி ஆசைதான்.

6. இலக்கியங்கள் எல்லாம் மனிதர்களின் சிந்தனையில் உதித்தவை அல்ல.நூற்றுக்கு தொண்ணுறு அனுபவத்தில் உதித்தவை.

7. பேராசைகள்  பிடித்து அலையத்திருந்தால் பெரும்பான்மையானோர் சிறிய முயற்சிகளில் கூட வெற்றியை காண்பார்கள்.

8. மனிதனுடைய திறமை பெரிதல்ல . கிடைக்க கூடிய சந்தர்ப்பமே அவனை பிரகாசிக்க   செய்கிறது.

9. தேவைக்காக கடன் வாங்கு. கிடைக்கிறதே   என்பதற்காக வாங்காதே.

10. நல்லதே நினை, நல்லதே பேசு, நல்லதே கேள், நல்லதே நடக்கும்.

11. குற்றம் புரிந்தவனும் , தனக்கு நியாயம் கேட்கிறான். குற்றத்திற்கு ஆட்படடவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை இறுதியில் பணமே முடிவு செய்கிறது.

12. ஒழுங்காக சம்பாதித்து பணக்காரனானவனும் குறைவு. உண்மை பேசி பதவிக்கு வந்தவனும் குறைவு.

13. இருப்பது ஒரு பிடி அன்னமானாலும் தனக்கென இல்லது பிள்ளைக்கு ஊட்டி மகிழ்பவளே தாய்.

14. வெற்றி பெற்றவர்கள் தோல்விக்காக காத்திருங்கள். தோல்வியுற்றவர்கள் வெற்றிக்காக காத்திருங்கள்.

15. எதையும் இன்னொருவருக்கு கொடுத்து விடமுடியும்.ஆனால் இந்த நிம்மதியை மட்டும் மனிதன் தன்னிடமிருந்தேதான் பெற்றுக்கொள்ள முடியும்.

16. கருது பழையதாயிருக்கலாம். பலர் கூறியுமிருக்கலாம். ஆயினும் அது உயர்த்த வகையில் அழகாய் கூறுபவனுக்கே உரியதாகும்.

17. தேவைக்கு மேலே பொருளும் , திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால்  கண்ணில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.

18. அடக்கத்தின் மூலம் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றியுடன் முன்னேறியவர்கள் உண்டு.

19. யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே, ஒரு வேளை மாற நினைத்தால் , ஒவ்வொரு மனிதர்களும் நீ மாற வேண்டி இருக்கும்.

20. மரம் போல் மனிதன் வளருகின்றன என்பது பெருமையல்ல. மரம்போல் அவன் பயன்படுகிறானா    என்பதே பெருமை.

21. அனுபவம் என்பது ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே.

22. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சம்பாதிக்க பணத்தை அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.

23. எந்த பக்கமும் சேரக்கூடிய மனிதர்களிடம் விழிப்பாய் இருக்க வேண்டும்.

24. அளவுக்கு மிஞ்சிய சாமர்த்தியம் முட்டாள் தனத்தில்தான் முடியும்.

25. காதல் மயக்கத்தில் தோன்றினால் மங்கும். அன்பில் தோன்றினால்   பொங்கும்.

26. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? எந்த விமர்சனத்தையும் தாங்கி கொள்ளும் உள்ளம் வேண்டும்.

27. கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நிஜமாகும் ஒரு தினமே!

28. ஏராளமான வாய்ப்புகள் வரும்போதுதான் ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

29. அறிவாளிகளுக்கு   அறிவுதான் அதிகம். முட்டாள்களுக்கு அனுபவம் அதிகம்.

30. நெருப்பில் இறங்கிய பிறகு வெயிலுக்கு அஞ்சுவதில்லை அர்த்தமில்லை.

31. நம் நாட்டில் எல்லாருமே நடிகர்கள். இதில் ஏன் சிலருக்கு மட்டும் பட்டம் தருகிறார்கள்.

32. நம்ப கூடாதவனை நம்பி கெடுவதும் தவறு.நம்ப கூடியவனை நம்பாமல் கெடுவதும் தவறு.

33. அடைவதற்கு ஆசை படுகிறவன், இழப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.

34. சாக்கடை என்பது மோசமான பகுதிதான், ஆனால் அப்படி ஒன்று இல்லாவிட்டால்  ஊரே சாக்கடையாகிவிடும்.


35. பிறருக்காக அழுகிறவன் கண்ணுக்கு உறவு தெரிகிறது.பிரிந்து விட்டோம்   என்று அழுகிறவன் கண்ணுக்கு துறவு தெரிகிறது.    



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content