Superb Thinking quotes in Tamil # 08
Superb Thinking quotes in Tamil # 08
1. அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல். – நெப்போலியன்
2. அழகு மற்றும் அப்பாவித்தனம் ஆகியவற்றுக்கு எதிரிகள் கிடையாது. - வில்லியம் பட்லர் ஈட்ஸ்
3. அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே! உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்? நீயே உன் காவலன்....ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே! - மனதை வருடிய வரிகள்
4. அழும்போது தனியாக இருந்து அழ வேண்டும். சிரிக்கும் போது நண்பர்களோடு இருந்து சிரிக்க வேண்டும். - கவிஞர் கண்ணதாசன்
5. ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.. - கவிஞர் கண்ணதாசன்
6. ஆசையை வளரவிடாதே அது "கள்" ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை"கள்") - மனதை வருடிய வரிகள்
7. ஆடம்பரம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவன், கண்டிப்பாக ஏழையாக இருக்க வேண்டும். - ஜார்ஜ் எலியட்
8. ஆண்கள் பொதுவாக தங்களின் தாயின் உருவாக்கத்தைப் பொருத்தே இருக்கின்றார்கள். - ரால்ப் வால்டோ எமர்சன்
9. ஆர்வம் இல்லாமல் அடைந்த எதுவும், எப்போதும் சிறந்தது அல்ல. - ரால்ப் வால்டோ எமர்சன்
10. இடர்ப்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்து காட்டும். – அரிஸ்டாட்டில்
11. இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம். – விவேகானந்தர்
12. இந்தியாவில் நாம் மரணம், நோய், பயங்கரவாதம் மற்றும் குற்றம் பற்றி மட்டுமே படிக்கின்றோம். – அப்துல்கலாம்
13. இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய். – அரிஸ்டாட்டில்
14. இன்று உங்களால் பெற முடிந்த மகிழ்ச்சியை நாளை வரை தள்ளிப் போடாதீர்கள். - ஆல்டஸ் ஹக்ஸ்லி
15. இரண்டு உடல்கள் வசிக்கும் ஒரு ஆன்மாவிற்காக உருவானதே அன்பு - அரிஸ்டாட்டில்
16. இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும். - கவிஞர் கண்ணதாசன்
17. இரண்டு தோட்டங்களுக்கு இடையே எழுப்பப்பட்டுள்ள சுவர் போன்றது துன்பம். - கலீல் ஜிப்ரான்
18. இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது - நெப்போலியன்
19. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
20. உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள். - அம்பேத்கர்