ஜேம்ஸ் ஆலன் சிந்தனை வரிகள் # 01
James Allen Inspirational Quotes in Tamil - Part 01
ஜேம்ஸ் ஆலன் சிந்தனை வரிகள் # 01
James Allen Inspirational Quotes in Tamil - Part 01
ஜேம்ஸ் ஆலன் சிந்தனை வரிகள் # 01
James Allen Inspirational Quotes in Tamil - Part 01
1.எவன் சந்தேகத்தையும், அச்சத்தையும் வெற்றி கொண்டானோ அவனே தோல்வியையும் வெற்றி கொண்டவனாவான்.
2.மனதை உற்சாகப்படுத்து. உன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படு; அதைரியமூட்டுபவர்களை அருகில் விடாதே.
3.காலம் உனது உயிராகும். அதை வீணாக்குவது உன்னை நீயே கொலை செய்வதற்கு ஒப்பாகும்.
4.அலட்சியம் இல்லாமல் இதயத்தை சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தால் போதும் அனைத்தும் நல்லவையாக அமையும்.
5.உன்னதமான வாழ்விற்காக எல்லோருமே ஏங்குகிறோம்; ஆனால், அதற்கு அடிப்படையான உன்னதமான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தயங்குகிறோம்.
6.ஒழுக்கம் உள்ள மனிதன் பெருந்தன்மையும் மரியாதையும் கலந்த சொற்களையே பேசுவான்.
7.மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளித்தல், மற்றவர்களின் கஷ்டங்களைப் போக்குதல் இவையே நமது கடமைகள். இரக்கம் என்ற அரிய குணம் இருந்தால் கடைசி வரை இந்த இரண்டு பணிகளையும் சிறப்பாகச் செய்ய முடியும்.
8.உன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் பொருள் நிறைந்ததாகவும், இன்பம் பயப்பதாகவும் இருக்கட்டும். எக்காலத்திலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதுவாயாக.
9.மனத்தினால் தீமையை மறப்பது மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தீமையை விலக்கி, அதனை அறிதல் வேண்டும். நன்மையை மனத்தினால் அங்கீகரித்தால் மட்டும் போதாது. விடமுயற்சியினால் ஒவ்வொரு நாளும் நன்மையைச் செய்து, அதனை அறிதல் வேண்டும்.
10.மனநேர்மை உடல் ஆரோக்கியத்தை உண்டு பண்ணுவது போல ஒருவன் விரும்பும் செயலையும் அது நேர்வழியில் செய்து முடித்துவிடுமாறும் செய்கிறது.