தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 01
Tamil Haiku Kavithai - Part 01
தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 01
Tamil Haiku Kavithai - Part 01
தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 01
Tamil Haiku Kavithai - Part 01
1.வறுமை:
அச்சிறுவனின்
சட்டையில்
முன்னிருந்தும்
பின்னே இல்லை
பொத்தான்கள்
!!
2.அடகு:
அடகு வைத்தேன்
மீட்க முடியவில்லை
அவளிடம்
என் மனசு.
3.வால் பேப்பர்:
அடுக்கு
மாடிக் குடியிருப்பு
அறையெங்கும்
பசுமை
வால் பேப்பரில் செடிகள்...!
4.பலூன் வியாபாரி:
அதிகம் விற்க இயலவில்லை
வயதான மூச்சுக்காற்றை
5.ஆலமரம்:
அதிகரித்தமண்ணாசை
கிளைகளும்
வேர்விடுகிறது
6.கல்லூரி:
அனைவருக்கு
ஒன்றாய் இருந்த முகவரி
7.ஆகஸ்டு-15:
அனைவருக்கும்
மகிழ்ச்சி!
விடுதலை
நாள் என்றா?
இல்லை...
விடுமுறை
நாள் என்று.
8.குழந்தை மனம்:
அனைவரும்
படிக்கவேண்டிய
மிகப்பெரிய
காவியம்.
9.அன்ன நடை:
அன்னங்கள்
நடை பழகுகின்றன,
அவளைப் போல் நடக்க...!
10.முகம்:
அமாவாசை
நாளில்
நிலவு...!
எதிர் வீட்டுச் ஜன்னலில்
அவள்...!