அண்ணல் அம்பேத்கர் சிந்தனை வரிகள் #02
Ambedkar Inspirational Quotes in Tamil - Part 02
அண்ணல் அம்பேத்கர் சிந்தனை வரிகள் #02
Ambedkar Inspirational Quotes in Tamil - Part 02
அண்ணல் அம்பேத்கர் சிந்தனை
வரிகள் #02
Ambedkar Inspirational Quotes in Tamil - Part 02
11.அறியாமையில் மூழ்கித் தவிக்கும் மக்கள், ஆதாரமற்ற கற்பனை
கொள்கைகளால் விழுங்கப்பட்டு, மக்கள் விரோத பழமைவாதிகளால் ஆட்டிப்படைக்கப்பட்டு கொண்டிருப்பதுதான்
நமது கிராமங்களின் உண்மையான நிலை."
12.சாதி என்னும் காழ்ப்புணர்வினால் பெரும்பாலான மக்கள் மனிதத்தன்மையற்று
வாழ்கின்றனர்
13.உங்களின் வறுமை உடன் .ந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க
முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும்
14.அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப்
புதையுங்கள்
15.எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை நான் புரிந்து
கொள்ளவில்லை என்றால், நான் மனிதனே இல்லை
16.வறுமையிலும் அறியாமையிலும் வாடும் தம் சகோதரர்களுக்குப்
பணிசெய்வது கற்றவர் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்."
17.விழுமியக் குறிக்கோளில் ஒருவன் கொண்டுள்ள மெய்யான ஈடுபாடும்
திறமையும் நிரூபிக்கப்படும்போது அவனுடைய எதிரிகள் கூட அவனை மதிப்பார்கள்."
18.சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளே ஜனநாயகத்தை
அழிக்கின்ற கரையான்கள்."
19.ஒருவன் நாணயமானவனாக இருக்கலாம். ஆனால் அவன் அறிவிலியாக
இருந்தால் பயனில்லை. மாமனிதனுக்கு நேர் முரண் அறிவிலி!"
20.சோசலிச நிர்மாணத்தின் மீது பகைமை பாராட்டுகின்ற அல்லது
அதற்குச் சதி செய்கின்ற சமுதாய சக்திகள், சமுதாயக் குழுக்கள் எல்லாம் மக்களின் எதிரிகள்