கி வீரமணி சிந்தனை வரிகள் # 03
K.Veeramani Inspirational Quotes in Tamil - Part 03
கி வீரமணி சிந்தனை வரிகள் # 03
K.Veeramani Inspirational Quotes in Tamil - Part 03
கி.வீரமணி சிந்தனை வரிகள் # 03
K.Veeramani Inspirational Quotes in Tamil - Part 03
21.இன்பத்தினை அடைய சிரிப்பு ஒரு திறவுகோல், அது மட்டுமல்ல, நம்மை மனிதம் மலர்ந்தவர்களாக காட்டிக் கொள்வதும் அச்சிரிப்புதான்.
22.நாம் பிறருக்கு உதவும் போது ஏற்படும் இன்பம்தான் நமது மனிதநேயத்தினை அளக்கும் கருவி.
23.எதிலும் துணிந்து பங்கேற்று பல்வேறு அனுபவங்களையும் சுவைக்கத் தவறாதீர்.
24.உடலை அழகுபடுத்திக் கொள்வதை விட மிகமிக முக்கியம் நம் மனதை, உள்ளத்தை அழகுபடுத்திக் கொண்டு, பிறர் மனதை மதித்து வாழ்வது.
25.இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். புகழ் ஓட்டமும் அதுபோலத்தான். அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம்.
26.மதுவும், சூதாட்டமும் மனிதர்களின் மானத்தையும், அறிவையும் பறிக்கும் கேடு கெட்ட நோய்கள் என்பதை உணருங்கள்.
27.உடல் நலம் பெரிதும் மனநலத்தைப் பொறுத்தது.
28.நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்.
29.மனிதன் அடக்கம் என்ற போர்வையில் தன்னைப் போர்த்திக் கொள்ள வேண்டும்.
30.வாழ்க்கையில் தவறுகள் என்று ஒன்றுமில்லை; எல்லாம் பாடங்கள், அனுபவங்கள், அவைதான் நன்மையைத் தருபவை.