சாணக்கியர் சிந்தனை வரிகள் - தமிழ் # 03
Chanakya Inspirational Quotes in Tamil - Part 03
சாணக்கியர் சிந்தனை வரிகள் - தமிழ் # 03
Chanakya Inspirational Quotes in Tamil - Part 03
சாணக்கியர் சிந்தனை வரிகள் #03
Chanakya Inspirational Quotes in Tamil - Part 03
21.வாழ்நாள் முழுவதும் அறிவைத் தேடுவதைவிட செயல்படுபவனே சிறந்தவன்.
22.விதியையே நம்பியிருப்பவன், மனிதர்களை இழந்து, எந்த செயலையும் செய்யாதவனாக, அல்லது எடுத்த காரியங்களையெல்லாம் சரிவர நடக்காமல் அழிவடைவான்.
23.மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள்.
கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.
24.இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.
25.ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.
26.ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.
27.பேச்சிலும், செயலிலும், சிந்தனையிலும் உண்மையாக நடந்து கொள்வதைவிட வேறு விரதமோ, தவமோ தேவையில்லை.
28.ஆடையைப் பார்த்து மனிதனை அளவிட மாட்டான் புத்திசாலி.
29.ஒருவருடைய நடத்தைதான் நண்பர்களையோ, விரோதிகளையோ உருவாக்குகிறது.
30.தேவையான செலவை செய்யத்தயங்குபவன் முட்டாள்.