சாணக்கியர் சிந்தனை வரிகள் - தமிழ் # 04
Chanakya Inspirational Quotes in Tamil - Part 04
சாணக்கியர் சிந்தனை வரிகள் - தமிழ் # 04
Chanakya Inspirational Quotes in Tamil - Part 04
சாணக்கியர் சிந்தனை வரிகள் #04
Chanakya Inspirational Quotes in Tamil - Part 04
31.உயர்ந்த குணமுடையவர்கள் எப்போதும் தன்னலத்தைப் பற்றி கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் உலக நன்மைக்கான செயல்களில் ஈடுபடுகிறார்கள் தாமும் இவ்வுலகிலேயே வசிப்பதால், உலக நன்மையானது தமக்கும் நன்மையாகவே மாறிவிடுகிறது.
32.கொடுக்கும் கொடையைவிட கொடுப்பவனின் மனநிலையே அவனை அடையாளம் காட்டுகிறது.
33.நேர்மையும் லாபமும் ஒரே பையில் அடங்குவதில்லை.
34.உன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.
35.பயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு.
36.ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.
37.உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்.
அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்.
பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து.
தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.
38.சுறுசுறுப்பு, மனஉறுதி என்ற வெற்றிக்குதிரைகளில் பயணம் செய்வான் புத்திசாலி.
39.மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.
40.பயமும் தயக்கமும் உள்ளவனை தோல்வி தொடர்ந்துகொண்டே இருக்கும்.