தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 03
Tamil Haiku Kavithai - Part 03
தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 03
Tamil Haiku Kavithai - Part 03
Tamil Haiku Kavithai - Part 03
21.கடற்கரை அலை:
அவளின் பூ விரல்களை
தாவி பறிக்க முயல்கிறது
கடற்கரை
அலை !!
22.காதல்:
அவளை
சிறைபிடிக்க
நினைத்து
நான் கைதியானேன்...!
23.என் விழிகள்:
அவள் கடக்கும் திசையோடு
கூடவே பயணிக்கிறது
என் விழிகள் !!
24.அவள் கண்கள்:
அவள் கண்கள்
என் நிதானத்தை சிதைக்கும் இரு கஞ்சா இலைகள்
25.கொலுசு
:
அவள் வருவதை செல்வது உன் வேலை
26.தொலைபேசி:
அவ்வப்போது
பேசி ஓயும்
ஊமைப் பேச்சாளன்.
27.வானவில்:
ஆகாயத்தின்
சேவைக்காக
ஆண்டவன்
போர்த்திய
அழகுப் பொன்னாடை
வானவில்...!
28.பெண்மை :
ஆடவர் கடக்கும் போது
தலைகுனியும்
பெண்மை
ரசனைக்குரியது
!!
29.வறுமை:
ஆடைகிழிந்த
சிறுமி
புதுத்துணி
மாற்றுகிறாள்
ஜன்னலுக்கு...!
30.நாத்திகன்:
ஆத்திகன்
உடைத்த தேங்காய்
நாத்திகன்
பாதத்தை
பதம் பார்த்து விட்டது !!