Type Here to Get Search Results !

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 02

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 02


Tamil Haiku Kavithai - Part 02







தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 02


Tamil Haiku Kavithai - Part 02



Tamil Haiku Kavithai 11

Tamil Haiku Kavithai 12

Tamil Haiku Kavithai 13

Tamil Haiku Kavithai 14

Tamil Haiku Kavithai 15

Tamil Haiku Kavithai 16

Tamil Haiku Kavithai 17

Tamil Haiku Kavithai 18

Tamil Haiku Kavithai 19

Tamil Haiku Kavithai 20




Tamil Haiku Kavithai - Part 02

11.டாஸ்மார்க்:

அரசாங்கம் நடத்தும்
உயிர் கொல்லி மருந்து...
12.கல்நெஞ்சக்காரர்கள்:
அரிசி பருப்பில்
கல் சேர்ப்பு.
கல்நெஞ்சக்காரர்கள்...!


13.புறக்கணிப்பு:

அறுபடாமலே புறக்கணிக்க பட்டது
இரண்டாவது செருப்பு

14.பூக்கோலம்:

அழகிய கோலம்
காற்றுதான் கலைத்திருக்க வேண்டும்
சிதறிக்கிடக்கும் முருங்கைப்பூக்கள்.

15.நிழல்:

அழுகிறான்
கண்ணீரில்லை
நிழல் !!

16.வாட்டர் சர்வீஸ்:
அழுக்கடைந்த பூமிக்கு
வாட்டர் சர்வீஸ்...

மழை...!

17.கள்ளிப் பால்!:

அழுவாத (பெண்)
பிள்ளையும்
குடித்தது...

கள்ளிப் பால்...!

18.மழை:

அவசரக் காற்று
முதல் மழை
புளியம்பூக்கள்...!

19.ஏழை:
அவன்
வீட்டைவிட்டு வெளியே ஓடினான்,
மழை பெய்தால்
நனையாமல் இருக்க.
20.கோலம்:
அவளிட்ட கோலத்தை
பூ இட்டு ரசித்தது
அருகிலிருந்த மரம் !!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content