Type Here to Get Search Results !

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 09

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 09

Tamil Haiku Kavithai - Part 09







தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 09

Tamil Haiku Kavithai - Part 09



Tamil Haiku Kavithai 81

Tamil Haiku Kavithai 82

Tamil Haiku Kavithai 83

Tamil Haiku Kavithai 84

Tamil Haiku Kavithai 85

Tamil Haiku Kavithai 86

Tamil Haiku Kavithai 87

Tamil Haiku Kavithai 88

Tamil Haiku Kavithai 89

Tamil Haiku Kavithai 90





Tamil Haiku Kavithai - Part 09

81.விதி:

கடவுளுக்கு மட்டுமே
சொந்தம்
விதவையின் வீட்டில்
பூத்த ரோஜா மலர்...!




82.தட்சணை:

கடவுளைக் காண சென்றவன்
கடவுளாகிப்போனான்
தட்டில் போட்ட தட்சணை !!

83.முத்தம்:

கட்டி தழுவி
முத்தம் வைத்தாள்
மா-என்ற
பசுவின் நெற்றியில்

மலடி...!

84.கடிகாரம்:
  கண்ணாடி கூட்டிற்குள்
ஒரு காதல்
ஜோடி...

கடிகாரம்...!


85.மதக்கலவரம்:

கருவறையில் பத்திரமாய் கடவுள்கள்...
தெருவெங்கும் கல்லறையாய் அப்பாவிகள்...!

86.நகல்:

கள்ள நோட்டில்
அடித்தபோதும்
சிரித்துக்கொண்டே,
காந்தி...!

87.அலங்காரம்:
 கழுத்து நிறைய நகைகள்,அழகான பட்டு புடவை அணிந்தும் வெளியில் செல்ல
முடியவில்லை...
ஜவுளிக்கடை பொம்மை...

88.குடி  மகனின்  ஏக்கம்...!:

காந்தி  ஜெயந்தி.....!
மகிழ்ச்சி  அடையவா....?
வருத்தப்படுவதா.......?
89.புத்தகம்:

காற்றும்
என்னைப் போலத்தான்
படிக்காமல் புரட்டுகிறது,
புத்தகம்...!

90.பொட்டு:

குடிகாரகணவன் வைத்தபொட்டு
இறந்தபின்னும் மறையவில்லை
மனைவியின் நெற்றி வடு !!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content