தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 06
Tamil Haiku Kavithai - Part 06
தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 06
Tamil Haiku Kavithai - Part 06
Tamil Haiku Kavithai - Part 06
51.மேகம்:
உயரத்தில்
பஞ்சுமிட்டாய்
வான் மேகம்.
52.விதவை :
உயிரோடியிருந்தும்
புதைப்படுகிறாள்
சமூகத்தின்
சித்தரிப்பில்
விதவை
53.வண்ணத்துப்பூச்சி
:
உரசியும்
வண்ணம் ஒட்டவில்லை
வண்ணத்துப்பூச்சி!!
54.ஆலமரம்:
ஊஞ்சல் ஆட ஆளில்லாமல்
ஏங்கி நிற்கிறது
நகரத்து
ஆலமரம் !!
55.சுவாசம்:
ஊர்திப்புகை
மூச்சுத்
திணரும்
செடிகள்.
56.மலட்டுத்தாய்:
எங்கோ கேட்கும் அழுகுரல்
அடக்க நினைத்து ஏங்கி போகிறாள்
மலட்டுத்தாய்
!!
57.ஒவியம்:
எதிர்வீட்டு
முற்றத்தில்
ஒரு ஒவியமே
ஒவியம் வரைய கண்டேன்
58.வெள்ளை நிலா:
எத்தனை பிறவி எடுத்தாலும் அழகில் உன்னை வெல்ல முடியாமல் தோற்றுக்கொண்டே இருக்கிறது...
நிலா ...!
59.காகிதம்:
எந்த நிறத்தையும்
ஏற்கும்
சமரசப்பிறவி
காகிதம்...!
60.முயற்சி:
எந்த ரப்பரைக் கொண்டும்
அழிக்க முடியவில்லை...
வறுமைக்
கோடு...