தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 11
Tamil Haiku Kavithai - Part 11
Tamil Haiku Kavithai - Part 11
101.மழை கொண்ட கண்ணீர்:
சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன்
கதறிக்கொண்டிருந்தது
மழைத்துளிகள்
நீ நனைகிறாய் என்று...!
102.இணையம்:
சத்தம் போட்டு ஆடி ஓடிய குழந்தையின்
கை கால்களை உடைக்காமல்
ஊனமாக்கியது
இணையம் !!
103.கண்கள்:
சந்தோசமாய்
சிறைப்பட்டன
வண்டுகள்....
அவள் கருவிழி...!
104.இறுதிப்
பூக்கள்...!:
சாலை முழுவதும்
பூக்கள்...
வரவேற்க
அல்ல
வழியனுப்புவதற்கு...!
105.கவனக்குறைவு :
சாலையில்
அவன் மரணத்தை நிர்ணயிக்க
உன் கவனக்குறைவு யார் ?
106.சூரிய ஒளி:
சிதறிய வெள்ளி நாணயம்
ஓட்டை குடிசையில் விழுந்த
சூரிய ஒளி...!
107.தேனீர் கடை:
சிறு சட்டசபை
அமைதியாய்
அமர்ந்திருக்கிறது
தேனீர் கடை பலகை !!
108.நாட்காட்டி:
செய்யாத
தவறுக்கு
முழு வருடமும் ஆணியில் சிறை
நாட்காட்டி
109.ஆயுள் ரேகை:
ஜோதிடன்
தடுமாறினான்...
உழைப்பாளியின்
கைகளில்
அழிந்துபோனஆயுள்ரேகை...
110.ஆயத்தம்:
டயர் வண்டி ஓட்டி
நாளைய விமானி ஆயத்தம்