Type Here to Get Search Results !

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 10

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 10

Tamil Haiku Kavithai - Part 10







தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 10

Tamil Haiku Kavithai - Part 10



Tamil Haiku Kavithai 91

Tamil Haiku Kavithai 92

Tamil Haiku Kavithai 93

Tamil Haiku Kavithai 94

Tamil Haiku Kavithai 95

Tamil Haiku Kavithai 96

Tamil Haiku Kavithai 97

Tamil Haiku Kavithai 98

Tamil Haiku Kavithai 99

Tamil Haiku Kavithai 100




Tamil Haiku Kavithai - Part 10

91.உதவி:

குப்பைத்தொட்டிகளை சுத்தமாக
வைத்திருக்க உதவுங்கள்
நம்மில் சிலருக்கு அவை
உணவுக்கூடமாகவும் இருக்கிறது.




92.ஊஞ்சல்:

குழந்தைகள்
ஊஞ்சலாடும்
சிம்மாசனம்

அப்பாவின் பின்கழுத்து

93.அடடே..!:

கூட்டக் கூட்ட
குறைந்து போனது
துடைப்பம்...!

94.வறுமை:

கூட்டநெரிசல்
காலியாக
சிறுமி கையில் தட்டு.




95.வெட்கம்:

கூண்டிற்குள் இருந்து
சுதந்திரப் பொன்விழா...

வெட்கம்...!

96.முதிர்கன்னி...!:
  
கூந்தலில் வெளிச்சம்
வாழ்க்கையில்
இருட்டு.


97.மழைநீர்:

கொடுத்த தெய்வம்
கூரையைப் பிய்த்தது...
வீட்டுக்குள் மழைநீர்...!




98.உணர்ச்சி:
 

கோபமா... வெட்கமா...
சொல்லு சொல்லு

தொட்டாச்சிணுங்கி...!


99.வாகன நிறுத்தம்:

கோலமிட
வாசலில்லை
வாகன நிறுத்தம் !!


100.வறுமை:
சட்டைக்கு கஞ்சிப்போட்டேன்
எதிரே பசியோடு
ஏழைச் சிறுவன்...!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content