தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 12
Tamil Haiku Kavithai - Part 12
தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 12
Tamil Haiku Kavithai - Part 12
Tamil Haiku Kavithai - Part 12
111.கலப்படம்:
தங்கத்தில்
வெள்ளி கலப்படம்
என்னவள்
காலில்
கொலுசு...!
112.ஒற்றை ரோஜா:
தரை தொடாத
விழுதுகளில்
ஊஞ்சலாடுகிறது...
அவள் கூந்தலில்
ஒற்றை ரோஜா...!
113.மணல் வீடு:
தற்போதைய
குழந்தைகளால்
புதுப்பிக்கப்படவில்லை
மணல் வீடுகள் !!
114.வாசம்:
தாமரை குளத்தில்
மல்லிகை
வாசம்
குளித்துப்போயிருப்பாள்...
அவள்...!
115.நாட்காட்டி:
தினம்தினம்
நோகடித்தாலும்
கடமையைச்செய்யும்
காகித மனிதன்
தினசரி காலண்டர்.
116.திருட்டு:
திருடு போனது...
வீட்டைக்
காக்க வாங்கி வந்த
விலை உயர்ந்த நாய்...!
117.தொப்பை:
திருமணம்
தேவை இல்லை
உடலுறவும்
தேவை இல்லை
ஆனாலும்
கர்ப்பமாகலாம்...
தொப்பை...!
118.தேர்:
திருவிழாவில்
ஊர் சுற்றக் கிளம்பியது
தேர்.
119.தியாகம்:
தீக்குச்சியின்
தியாகத்தை
எண்ணித்தான்
உருகுகிறதோ
மெழுகுவர்த்தி?
120.இதயம்:
துடிக்கும்போது
யாரும் கவனிக்கமாட்டார்கள்
நின்றுவிட்டால்
பலரும் துடிப்பார்கள்.