ஜீன் ஜாக்ஸ் ரூஸோ சிந்தனை வரிகள்
Jean Jacques Rousseau Inspirational Quotes in Tamil
ஜீன் ஜாக்ஸ் ரூஸோ சிந்தனை வரிகள்
Jean Jacques Rousseau Inspirational Quotes in Tamil
ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
சிந்தனை வரிகள்
Jean Jacques Rousseau Inspirational Quotes in Tamil
1.குற்றத்தை மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை மன்னிக்க முடியாது.
2.வாழ்க்கை என்பது நாம் நீண்ட நாள் வாழ்வதா? அல்லவே அல்ல. ஒவ்வொரு கணமும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டு வாழ்கின்றோமல்லவா, அதுதான் வாழ்க்கை.
3.மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் நீ எளிய வாழ்கையைக் கடைப்பிடி.
4.ஆண்கள் தங்களுக்குத் தெரிந்ததைத்தான் சொல்வார்கள். ஆனால் பெண்கள் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களைத்தான் சொல்வார்கள்.
5.வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சமமாய் ஏற்றுப் பாவிக்கிற மனிதன் முறையான கல்வியைப் பெற்றிருப்பான்.
6.நீ எதை சொல்கிறாய் என்பதை விட, யாரிடம் சொல்கிறாய் என்பதே முக்கியம்.
7.தீய செயல்கள் நம்மைத் துன்புறுத்துவது, அவற்றைச் செய்த காலத்தில் அன்று. வெகுகாலம் சென்று அது ஞாபகத்திற்கு வரும்போதுதான்.
8.வாழ்கையை ரசிப்பவர்கள் நீண்டகாலம் வாழ்கின்றனர்.
9.ஒழுக்கம் போர்க்களம் போன்றது. நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால், ஓயாமல் மனதோடு போராட வேண்டும்.
10.ஒரு மனிதனை உயர்த்துவது அவனுடைய சிந்தனைதான்.
11.பொறுமை கசக்கும்; ஆனால் அதன்மூலம் கிடைக்கும் பலன் இனிக்கும்.
12.நேற்றைய மனிதனின் வாழ்க்கை உண்மையும், எளிமையும் கொண்டதாயிருந்தது. இன்றோ சுகங்களையே அதிகம் விரும்பும் கேவலநிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது. சுகங்கள் அதிகரிக்கவும் ஒழுக்கங்கள் தேய்ந்து மறையலாயிற்று.
13.அமைதி நிறைந்த அடிமைத்தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது.
14.ஆடம்பரம் அதிகமாகிக் கொண்டே போனால் உண்மையான வீரமும், ஒழுக்கங்களும் அகற்றப்பட்டுவிடும்.