நெப்போலியன் ஹில் சிந்தனை வரிகள் #01 - தமிழ்
Napoleon Hill Inspirational quotes in Tamil - 01
நெப்போலியன் ஹில் சிந்தனை வரிகள் #01 - தமிழ்
Napoleon Hill Inspirational quotes in Tamil - 01
நெப்போலியன் ஹில் சிந்தனை வரிகள் #01
Napoleon Hill Inspirational quotes in Tamil - 01
1.உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது, நீங்கள் இப்பொழுது எங்கிருக்கீறீர்களோ அங்கேயேகூட இருக்கலாம்.
2.மனதில் ஒன்றைத் திட்டமிட்டு, அது நடக்கும் , கிடைக்கும் என்று நம்பினால், மனித மனம் எப்பாடுபட்டாவது அதை பெற்றுத் தந்துவிடும்.காரியங்களையும் செய்து முடித்துவிடும்.
3.என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால் நேரத்தை மட்டும் கேட்காதே!
4.உங்களால் பெரிய விஷயங்களைச் செய்யமுடியவில்லை என்றால், சிறிய விஷயங்களைச் சிறந்த வழியில் செய்து பாருங்கள்.
5.பயம், அச்சம் இரண்டுக்கும் பதிலாக வெற்றி மகிழ்ச்சி இரண்டையும் சிந்திக்கப் பழகுங்கள்.
6.பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக்கூடும்.
7.இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல, கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.
8.நல்ல காரியங்களைச் செய்ய ஒரு போதும் பயப்படாதீர்கள். தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்.
9.ஆழ்மனம் என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது. நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் நீங்கள் பயிரிடாவிட்டால், அதில் களைகள்தான் முளைக்கும்.
10.வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.