மசானபு புகோகா சிந்தனை வரிகள் - தமிழ்
Masanbu Pukoka inspirational quotes in Tamil
மசானபு புகோகா சிந்தனை வரிகள் - தமிழ்
Masanbu Pukoka inspirational quotes in Tamil
மசானபு புகோகா சிந்தனை வரிகள்
Masanbu Pukoka inspirational quotes in Tamil
1.ஒரு விஞ்ஞானி இரவு பகலாகக் கண்களைக் கெடுத்துக் கொண்டு புத்தகங்களில் மூழ்கியிருப்பான். கடைசியில் கிட்டப்பார்வையும் வந்துவிடும். இதுவரை அவன் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கடைசியில் பார்த்தால் கிட்டப்பார்வைக்கு மூக்குக் கண்ணாடி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிதான்.
2.அறிவியல் புரிந்து வைத்துள்ள இயற்கை என்பது முழுமையாக நாசம் செய்யப்பட்ட இயற்கை. அது எலும்புக்கூட்டுடன் உலாவும் பிசாசு. அதற்கு ஆத்மா கிடையாது. வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்த்து அதிக உற்பத்தி செய்வதல்ல. மனிதர்களை முழுமைப் பெறச் செய்வதே.
3.இயற்கை ஒரு போதும் மாறுவதில்லை. அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும், வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்.
4.மனித அறிவாற்றல் என்பது எவ்வளவு சிறியது என்பதைக் காட்டும் பணியைத்தான் அறிவியல் செய்துள்ளது.
5.உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், அது இயற்கையின் உற்பத்தி சக்தி பற்றாக்குறையினால் ஏற்பட்டதாக இருக்காது. மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்பட்டிருக்கும்.
6.இயற்கை உணவை அதிக விலைக்கு ஒரு வியாபாரி விற்றால், அவன் கொள்ளை லாபம் அடிக்கிறான் என்று பொருள். மேலும் இயற்கை உணவு, அதிக விலையுடையதாக இருந்தால், அவை ஆடம்பர பொருட்களாகி, வசதி படைத்தவர்களால் மட்டுமே வாங்கக் கூடியதாக மாறிவிடும்.
7.இயற்கை வேளாண்மை மென்மையானது; எளிமையானது; அது வேளாண்மையின் ஆதாரத்தை நோக்கி மீண்டும் செல்வதைக் குறிப்பது. ஆதாரத்தை விட்டு ஒரு அடி விலகி நடந்தாலும் அது மயானத்திற்கான நேர்வழிதான்!