ராஜாஜி சிந்தனை வரிகள் - தமிழ்
Rajaji Inspirational Quotes in Tamil
ராஜாஜி சிந்தனை வரிகள் - தமிழ்
Rajaji Inspirational Quotes in Tamil
ராஜாஜி சிந்தனை வரிகள் – தமிழ்
Rajaji Inspirational Quotes in Tamil
1.உள்ளம் உருகி வழிபட்டால், கடவுளின் அருள் எளிதில் கிடைக்கும்.
2.விரும்பிய வடிவில் கடவுளை வழிபாடு செய்யலாம். அதிலும் தாயாகக் கருதுவது சிறப்பு.
3.வாழ்வின் ஜீவநாடியான நீதியை காப்பது நம் கடமை.
4.மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஒழுக்கம் தேவை. அதுவே அடிப்படையும் கூட.
5.அதர்மமான ஆசை மனதில் முளைவிடத் தொடங்கும்போதே தாமதமின்றி அதைக் களைய முற்படுவது அவசியம்.
6.துன்பத்தின் சுமையை அனுபவிக்கப் பழகினால் ஒழிய, சுகத்தின் அருமையை ஒருவனால் தெரிந்து கொள்ள முடியாது.
7.நல்லது செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக ஏற்றுக்கொள். அதில் துன்பத்தை சந்தித்தாலும் பின்வாங்காதே.
8.சிறிய செயல் செய்பவனைப் பார்த்து நீ சிரிக்கிறாய். ஆனால், உன்னைப் பார்த்து இறைவன் சிரிக்கிறான்.
9.ஒரு விஷயத்தைக் கவுரவித்தால் ஒழிய, அந்த விஷயத்தின் உண்மை நமக்குப் புலப்படுவதில்லை.