வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 02
Happiness Quotes in Tamil(PART 02)
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 02
Happiness Quotes in Tamil(PART 02)
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 02
Happiness Quotes in Tamil(PART 02)
1. சந்தோசமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய்.. உன் வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக இருக்கும்..!
2. எவ்வளவு பணம் சம்பாதித்தாய் என்பது முக்கியம் இல்லை. உன் துன்பத்தில் பங்கு கொள்ள எத்தனை மனிதர்களை நீ சம்பாதித்தாய் என்பதே வாழ்க்கை வாழ்வதற்கான நோக்கம்...!
3. நிஜங்கள் தரும் சந்தோஷத்தை விட.. நினைவுகள் தரும் சந்தோஷமே அதிகம்.. நிஜங்கள் நிலைப்பதில்லை.. நினைவுகள் அழிவதில்லை..!
4. கோபத்தில் எது கிடைத்தாலும் வீசி எறிய எல்லோராலும் முடியும்.. ஆனால்.. அந்த கோபத்தையே வீசி எறிய ஒரு சிலரால்தான் முடியும்..!
5. உன் வாழ்வை பிறர் வாழ்வுடன் ஒப்பிடாவிட்டால் மகிழ்ச்சியுடன் வாழ்வை அனுபவிக்கலாம்!
6. நிம்மதி இருந்தால் நிமிடம் கூட வீணாகாது. நிம்மதி இல்லாவிட்டால்.. நிமிடம் என்ன? வாழ் நாள் முழுவதும் வீணாகிவிடும்..!
7. பிறர் மீதான வீண் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டாலே போதும். எப்போதும் நிம்மதியாக இருக்கலாம்...!
8. வாழ்க்கையில் சாதனை படைத்தேன் என்பதை விட, யாரையும் வேதனை படுத்தவில்லை என்பதே சிறந்தது...!
9. சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது! சுகமாகவே எந்நாளும் வாழ்ந்து விடவும் முடியாது! சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும்..!
10. வாழ்க்கையில் ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் ஒவ்வொரு சின்ன சின்ன சந்தோசங்களையும் ரசிக்கத் தெரிந்தவர்களே வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள்...!