வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 01
Happiness Quotes in Tamil(PART 01)
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 01
Happiness Quotes in Tamil(PART 01)
1. மகிழ்ச்சியை சேமித்து வைப்பதில் எந்த பயனும் இல்லை, அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
2. உன் சந்தோஷத்தை அடுத்தவரிடம் தேடாதே.. அது உனக்கு தனிமையை மட்டுமே தரும்.. உன் சந்தோஷத்தை உன்னுள் தேடி மகிழ்ச்சியாய் இரு..
3. உன் வாழ்வில் வரும் சிக்கல்களை கடக்கும் போது சிரித்துக் கொண்டே கடக்க முடிந்தால் உலகில் உன்னை விட வலிமையனவர் யாருமில்லை..
4. குறைகளை நாம் குறைக்கத் துவங்கினாலே போதும். தானாகவே நம்முடைய நிறைகள் நிறைந்து கொண்டே போகும்...!
5. விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும் தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும். மனம் விட்டுப் பேசுங்கள் – அன்பு பெருகும்.
6. நம் எண்ணத்தைப் பொறுத்தே வாழ்வில் நமக்கான சூழ்நிலைகள் உருவாகின்றன.
7. பிறக்கும்போது யாரும் மகிழ்ச்சியாக பிறப்பதில்லை. ஆனால் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தகுதியுடனேயே பிறக்கிறார்கள். எனவே முடிந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்க முயல்வோம்.
8. சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம். பறவைக்கு அழகு சிறகு. நமக்கு அழகு சிரிப்பு.
9. மத்தவங்க நம்மள பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்தை குறைத்தாலே போதும்.. இருக்குற மீதி வாழ்க்கையை நிம்மதியா வாழலாம்..!
10. உங்களுக்கு மதிப்பில்லை என்று நீங்கள் உணரும் இடங்களில் மெளனமாக இருக்க பழகுங்கள். காலப்போக்கில் உங்கள் மௌனம் உங்களுக்கான மதிப்பை அங்கே ஈட்டித்தரும்!