ஏ பி ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #06
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 06)
ஏ பி ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #06
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 06)
ஏ. பி. ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #06
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 06)
51.உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; ஆனால் தனக்கு ஏற்றாற் போல், உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்.
52.பல்லாண்டுகளுக்கு முன் என்ன செய்தோமோ அதையே மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்வது தோற்கடிக்கப்பட்ட பாதையில் பயணிப்பதை போன்றதாகும்.
53.நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவரும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
54.சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
55.வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
56.அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.
57.தேவையான அளவிற்கு சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் அதிகாரமும் உடைய ஒரு தலைவரால்தான் தமது அணியை வழிநடத்திச் செல்லும் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்ற இயலும்.
58.கால எல்லையைத் தவிர வேறு எந்த விதத்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.
59.ஒருபக்கம் இருநூறு முன்னூறு ஹீரோக்கள்; மறுபக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நூறு கோடி மக்கள்! இது மாற்றப்படவேண்டிய நிலவரம்.
60.இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.