ஏ பி ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #08
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 08)
ஏ பி ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #08
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 08)
ஏ. பி. ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #08
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 08)
71.தேசம் என்பது எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது. அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.
72.கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும். கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை.
73.முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.
74.நாம் உடல் நலமுடனும், மன நலமுடனும், மன வலிமையுடனும் வாழ சிரிப்பு அவசியம். அது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
75.சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் நகைச்சுவையும் ஒன்று.
76.ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல. உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.
77.இசையும், நடனமும் உங்களை மற்றொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். உங்களுக்கு மகிழ்ச்சியும், அமைதியும் தென்றலாக வீசச் செய்யும்.
78.இளைஞர்களின் அறிவுச் சுடரை ஏற்ற வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு.
79.அழகைப் பற்றி கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
80.ஒரு நல்லப் புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம். ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கே சமம்.
81.வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்.
82.முயற்சிகள் தவறலாம்... ஆனால் முயற்சிக்க தவறாதே.
83.ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால் ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.
84.நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு.