விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #06
Vivekananda inspirational quotes in Tamil(PART 06)
விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #06
Vivekananda inspirational quotes in Tamil(PART 06)
விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #06
Vivekananda inspirational quotes in Tamil(PART 06)
51.நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
52.அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்து தந்தே தீரும்.
53.உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
54.நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது.
55.இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடைவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
56.பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.
57.எல்லா நாகரிகங்களுக்குள் அடிப்படை சுயநல தியாகமே.
58.உலகம் எவ்வாறு நடக்கின்றதோ உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
59.வாழ்வில் வேகம் மட்டும் இருந்தால் போதாது, விவேகம் இருக்க வேண்டும்.
60.ஏழைச் சிறுவன் கல்வியை நாடிவர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.