விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #05
Vivekananda inspirational quotes in Tamil(PART 05)
விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #05
Vivekananda inspirational quotes in Tamil(PART 05)
விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #05
Vivekananda inspirational quotes in Tamil(PART 05)
41.உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
42.தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
43.வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தடைகளிலிருந்து விடுபடுங்கள்!
44.உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
45.நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
46.உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
47.நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும்.
48.உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
49.அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.